“ஏகம் சத் விப்ர பஹுதா வதந்தி” என்கிறது ரிக் வேதம். இறைவன் ஒருவனே ஆனால் ஞானிகள்/அறிவுள்ளவர்கள் அதை பலவாக சொல்கிறார்கள் என்று இது பொருள் படுகிறது. இங்கே நாம் பார்க்க வேண்டியது, முட்டாள்கள் அதை சொல்கிறார்கள் என்று வேதம் குறிப்பிடவில்லை. “விப்ர” என்றால், அறிவாளிகள், ஞானிகள் என்றே பொருள்படுகிறது. ஆகையால் வேதமே, இறைவனை அவரவர் வழியில் பார்ப்பதை, பலவிதமான உருவங்களோடும், தன்மைகளோடும் இறைவனை பார்ப்பதை ஒரு இயற்கையான செயல்பாடு என்று உரைக்கிறது, அங்கீகரிக்கிறது.ஆனால் இந்த மானங்கெட்ட சைவ சமய விரோதிகள் இதை சிவபூமியிலும் ,பாரதத்திலும் ஒரு பெரும் சூழ்ச்சியோடு கையாள்கிறார்கள் . படிக்காத, விஷயம் தெரியாத, பாமரர்களை, ஏதோ வேதத்திற்கும், உபநிடந்தங்களுக்கும் எதிராக உருவ வழிபாடு நடப்பது போல் ஒரு தவறான செய்தியை பரப்பி, அதன் மூலமாக மத வியாபாரம் செய்கின்றன.
No comments:
Post a Comment